இஸ்ரோ விஞ்சானி நம்பி நாராயணனின் பயோபிக் படமான ராக்கெட்ரி படத்தில் நடித்து இயக்கி இருந்தார் மாதவன். இந்த படம் கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆனது. திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. பேன் இந்தியா ரிலீஸ் என்பதால் பெரிய அளவில் நஷ்டம் இருக்காது என சொல்லப்படுகிறது. பின்னர் படம் ஓடிடியிலும் வெளியாகி ஹிட் ஆனது.
இந்நிலையில் இப்போது மாதவன் அடுத்து ஒரு பயோபிக்கில் நடிக்க உள்ளார். இந்த பயோபிக்கும் ஒரு விஞ்ஞானியைப் பற்றியதுதான். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் பயோபிக்கில் அவர் நடிக்க உள்ளதாக மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டே இதற்கான அறிவிப்பு வெளியான போதும் இன்னும் அடுத்த கட்ட நகர்வுகள் எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.