மாதவன் நடிக்கும் ‘ஜி டி என்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

vinoth
திங்கள், 27 அக்டோபர் 2025 (08:14 IST)
இஸ்ரோ விஞ்சானி நம்பி நாராயணனின் பயோபிக் படமான ராக்கெட்ரி படத்தில் நடித்து இயக்கி இருந்தார் மாதவன். இந்த படம் ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் இப்போது மாதவன் அடுத்து ஒரு பயோபிக்கில் நடிக்க உள்ளார். இந்த பயோபிக்கும் ஒரு விஞ்ஞானியைப் பற்றியதுதான். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் பயோபிக்கில் அவர் நடித்து வருகிறார். மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டே இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இப்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. ஜி டி நாயுடு லுக்கில் மாதவன் இடம்பெற்றுள்ள போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தை கிருஷ்ணகுமார் இயக்குகிறார். சத்யராஜ், ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பைசன் போகாதீங்க.. ட்யூட் போங்கன்னு சொன்னாங்க.. ஆனா அந்த டைரக்டர் செஞ்சுவிட்டாரு! - பா.ரஞ்சித்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் லுக்கில் அசத்தல் போஸில் துஷாரா விஜயன்!

என் 27 வருட வாழ்க்கையில் கற்றதை விட…. மாரி செல்வராஜுக்கு நன்றி தெரிவித்த துருவ்!

அந்த கேள்வியைக் கேட்டு துருவ்வின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாதீர்கள்… பசுபதி ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments