சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் கார்த்தி… வெளியான தகவல்!

vinoth
திங்கள், 27 அக்டோபர் 2025 (08:01 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. இந்நிலையில் திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன.

இப்போது அவர் சில படங்களில் நடித்துவரும் நிலையில் அந்த படங்கள் எதுவும் இதுவரை அவருக்கு பழைய சூப்பர் ஹிட் படங்கள் போல அமையவில்லை. மீண்டும் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட பல இளம் இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கவுள்ள ஒரு படத்தில் நடிகர் கார்த்தி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்தாண்டு தொடங்கி 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. படத்தின் இயக்குனர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பைசன் போகாதீங்க.. ட்யூட் போங்கன்னு சொன்னாங்க.. ஆனா அந்த டைரக்டர் செஞ்சுவிட்டாரு! - பா.ரஞ்சித்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் லுக்கில் அசத்தல் போஸில் துஷாரா விஜயன்!

என் 27 வருட வாழ்க்கையில் கற்றதை விட…. மாரி செல்வராஜுக்கு நன்றி தெரிவித்த துருவ்!

அந்த கேள்வியைக் கேட்டு துருவ்வின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாதீர்கள்… பசுபதி ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments