Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மதகஜ ராஜா’ திரைப்படம் ஏன் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை: படக்குழு விளக்கம்..!

Mahendran
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (17:37 IST)
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான "மத கஜ ராஜா" திரைப்படம் இன்னும் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை. இதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
 
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில், விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த  ‘மதகஜ ராஜா’ 2013-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால், படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடன்கள் தீர்க்கும் நோக்கில், இப்படத்தின் வெளியீட்டை தாமதப்படுத்தியது.
 
அதன்பின், 12 ஆண்டுகள் கழித்து, 2023 ஆம் ஆண்டு பொங்கலின் தினமான ஜனவரி 12-ம் தேதி படம் வெளியானது. விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரும் கவனத்தை பெற்றதால், படம் ரசிகர்களின் மனதை வென்றது மற்றும் ரூ. 60 கோடி வரை வசூலித்தது.
 
இந்நிலையில், இதுவரை இப்படம் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை. பொதுவாக, ஒரு திரைப்படம் ஹிட் ஆகும்போது, அதற்கான ஓடிடி உரிமைகள் விரைவில் விலை போகும். . ஆனால் "மத கஜ ராஜா" 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானதால், ஓடிடி உரிமைகள் தொடர்பாக சில சிக்கல்கள் உருவானதால், படத்தின் ஓடிடி வெளியீடு தாமதமாகி வருவதாகவும், இந்த பிரச்னைகள் விரைவில் தீர்ந்து, படத்தை ஹாட்ஸ்டாரில் வெளியிடும் திட்டம் உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மதகஜ ராஜா’ திரைப்படம் ஏன் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை: படக்குழு விளக்கம்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஹோம்லி லுக்கில் ஷிவானி நாராயணனின் லேட்ட்ஸ்ட் புகைப்படங்கள்!

திடீரெனப் அஜித் படம் பற்றிப் பரவிய தகவல்.. உடனடியாகப் பதிலளித்த சுரேஷ் சந்திரா!

பொன்னியின் செல்வன் படப் பாடல் காப்புரிமை விவகாரம்… ஏ ஆர் ரஹ்மானுக்கு நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments