சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அரண்மனை 4 படமும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸான மத கஜ ராஜா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து சுந்தர் சி வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படத்தை முடித்து ரிலீஸ் செய்கிறார்.
இந்த படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் ஏப்ரல் 24 ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதில் வடிவேலு பழைய நகைச்சுவை மன்னனாக கம்பேக் கொடுப்பார் என டிரைலர் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் ஓடிடி வியாபாரம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் தமிழகத்தில் சுமார் 450 திரைகளில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.