Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’மாநகர காவல் 2’: கேப்டன் மகன் ஹீரோவா?

’மாநகர காவல் 2’: கேப்டன் மகன் ஹீரோவா?
, புதன், 16 செப்டம்பர் 2020 (16:24 IST)
’மாநகர காவல் 2’: கேப்டன் மகன் ஹீரோவா?
கடந்த 1991ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ’மாநகர காவல்’. ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் எம். தியாகராஜன் என்பவர் இயக்கிய இந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பதும் ’சிட்டி போலீஸ்’ என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகி அங்கும் தமிழைவிட ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்திற்கு பின்னர் விஜயகாந்திற்கு தெலுங்கில் ஒரு மார்க்கெட் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 29 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது
 
இயக்குனர் எம் தியாகராஜன் இதற்கான கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும் இந்த படத்தை விஜயகாந்தின் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிகிறது. விஜயகாந்த் தற்போது நடிக்கும் நிலையில் இல்லை என்பதால் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
விஜயகாந்த்தின் சூப்பர் ஹிட் படம் ஒன்று 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீமேக் செய்யப்படுவதும் அதில் அவரது மகனே நடிக்க இருப்பதாகவும் வெளிவந்துள்ள  தகவல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிவுடன் நிமிர்ந்து நில்லுங்கள்…வாழ்க்கை அரவணைத்துக் கொள்ளும் செல்வராகவன் அட்வைஸ்