Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சும்மா இருக்க முடியல போல விஜய பிரபாகரனுக்கு...!

Advertiesment
சும்மா இருக்க முடியல போல விஜய பிரபாகரனுக்கு...!
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (09:25 IST)
இந்தி மொழிக்கு ஆதரவான தனது கருத்தை பதிவிட்டுள்ளார் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.  
 
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிப்பதற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என அறிவித்துள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’ஹிந்தி தெரியாது போடா’ மற்றும் ‘ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் கொண்ட டீசர்ட் அணிந்து திரையுலக பிரமுகர்கள் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இதனை அரசியல் கட்சிகளும் ஆதரித்தன. 
 
இந்நிலையில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், “அண்ணை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம். தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து இந்தி மொழிக்கு ஆதரவான தனது கருத்தை பதிவிட்டுள்ளார். 
 
மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், நாங்கள் எந்தவொரு குறிப்பிட்ட கட்சியையும் காப்பியடிக்கவில்லை. நாங்கள் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலும் இல்லை. ஆனால், அவர்கள் தமிழக இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள். எனவே, அதற்கான எதிர்ப்பை அவர்களது பாணியில் காட்ட விரும்பினோம் என பதிவிட்டுள்ளார். 
 
இதற்கு அவர் கடும் கண்டனங்களையும் கேலி கிண்டலையும் பதிலடியாக பெற்று வருகிறார். லூசு பயனா இருப்பான் போல, எந்த சித்தாந்தமும், கொள்கையும், கோட்பாடும் இல்லாம அரசியலை வியாபாரமா பார்த்தால் அப்படித்தான்டா தெரியும் எனவும் எதற்கு ஹிந்திய எதிர்கிறாங்கனு தெரிந்து கொள்ளுங்க எல்லாத்துக்கும் பிஜேபி ஆதரவு நிலை இருந்தால் 2019 முடிவு தான் வரும் தேர்தலிலும் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரிய திராவிட சர்ச்சை… இந்தி திணிப்பு – அண்ணா பிறந்தநாளில் நாம் அறியவேண்டியது