Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் டிவி TRP தூக்கி நிறுத்திய சிம்புவின் ’மாநாடு’… வெளியான தகவல்!

விஜய் டிவி TRP தூக்கி நிறுத்திய சிம்புவின் ’மாநாடு’… வெளியான தகவல்!
, திங்கள், 2 மே 2022 (16:23 IST)
மாநாடு படத்தின் தொலைக்காட்சி பிரிமீயர் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.

இதையடுத்து இந்த படத்தின் இந்திய மொழிகளுக்கான ரீமேக் தொகை மிகப்பெரிய விலைக்கு விற்பனை ஆகியுள்ளது. இப்படி பல சாதனைகளைப் படைத்துள்ள மாநாடு படத்தின் தொலைக்காட்சி பிரிமீயர் நேற்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. திரையரங்குகளில் சாதனை செய்தது போலவே தொலைக்காட்சியிலும் இந்த படம் சாதனைப் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அதிகம் பேரால் பார்க்கப்பட்ட புஷ்பா படத்தின் TRP ஐ இந்த படம் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூசு தட்டப்படும் எஸ் ஜே சூர்யாவின் பொம்மை… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!