Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூசு தட்டப்படும் எஸ் ஜே சூர்யாவின் பொம்மை… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

தூசு தட்டப்படும் எஸ் ஜே சூர்யாவின் பொம்மை… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
, திங்கள், 2 மே 2022 (16:17 IST)
எஸ் ஜே சூர்யா நடிக்கும் பொம்மை படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

மான்ஸ்டர் படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

படம் ரிலீஸுக்காக தயாராக உள்ள நிலையில் படத்தின் கதாநாயகன் எஸ் ஜே சூர்யா படத்தில் யுவனின் இசையமைப்புப் பணிகளை பற்றி வானளாவ புகழ்ந்து பேசியுள்ளார். இந்த படம் முடிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக ஆன நிலையில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியுசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோவாக முதல் படம்… வெளிநாட்டில் ஷூட்டிங்… கலக்கும் CWC புகழ்!