Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீரா மிதுனை கண்டித்த நடிகர் எம் எஸ் பாஸ்கர்!

மீரா மிதுனை கண்டித்த நடிகர் எம் எஸ் பாஸ்கர்!
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (10:08 IST)
நடிகை மீரா மிதுன் எப்போதும் தன்னை சுற்றி சர்ச்சைகள் இருக்கும் விதமாக பேசிவருகிறார்.

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை மிகவும் தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்து வந்தார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன். இதற்கு எதிர்வினை ஆற்றும் சம்மந்தப்படட் நடிகர்களின் ரசிகர்களும் ஆபாசத்தை வாரி உமிழ்ந்தனர். இதனால் சில நாட்கள் அவர் சமூகவலைதளங்களில் இவர் பேசுபொருளாக இருந்தார்.

இந்நிலையில் சில மாதங்கள் அமைதியாக இருந்த அவர் இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பட்டியலினக் கலைஞர்களை தவறாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் இணையத்தில் கண்டனங்களை தெரிவித்து மீரா மிதுனைக் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு உள்ளிட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மேல் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் மீரா மிதுனின் இந்த அவதூறை கண்டிக்கும் விதமாக எம் எஸ் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘"என்னவாயிற்று இந்தப் பெண்ணுக்கு.. உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாகக் கேட்பார்கள். ஆனால், இவர் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல. வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம்.சாதிப் பெயரைச் சொல்லிப் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும்போது இவர் ஏன் இவ்வளவு ஆணவமாகப் பேசுகிறார்? சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது?

என் தெய்வம் 'கலைஞானி' கமலஹாசன் தன்னை ஒரு படத்திலிருந்து ஒதுக்கித் தள்ளிவிட்டார் என்று இவர் கூறியிருப்பதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா? ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? என்ன மூடத்தனமான பேச்சு இது? விஜய், சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானியா? குறிப்பிட்ட சாதியினரைத் திரை உலகை விட்டுத் துரத்த வேண்டும் என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இவரது பேச்சு மனத்தைப் புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல... மடத்தனம். அகங்காரத்தின் உச்சம்.மற்றவர்கள் மனத்தைப் புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம். இத்தகைய பேட்டிகளை யூடியூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம். மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரைக் கண்டிக்கிறேன். இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.’ எனக் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் நாவலின் காப்பி இல்லை… கிடார் கம்பி மேலே நின்று – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எழுத்தாளர்!