Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லூசிபர் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் தேதி அறிவிப்பு!

லூசிபர் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் தேதி அறிவிப்பு!
, வியாழன், 29 ஜூலை 2021 (15:52 IST)
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் லூசிபர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 13 ஆம் தேதி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.

இந்த படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட மோகன் ராஜா தயாரிப்பாளர்களோடு ஏற்பட்ட மோதல் காரணமாக படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் சமாதானம் செய்யப்பட்டு மீண்டும் படத்தை இயக்குவதாக சொல்லப்படுகிறது. மேலும் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி அன்று சன் தொலைக்காட்சியில் வெளியாகும் டாக்டர் திரைப்படம்!