Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘லவ் டுடே’ படத்தை தெலுங்கில் வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்!

love today1
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (17:44 IST)
‘லவ் டுடே’ படத்தை தெலுங்கில் வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்!
சமீபத்தில் வெளியான லவ்டுடே திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
 
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இதுவரை 20 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற லவ்டுடே படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம்தான் விஜய் நடித்துவரும் வாரிசு படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''வாத்தி ''பட முதல் சிங்கில் ....தனுஷ்- ஜிவி.பிரகாஷின் வீடியோ வைரல்