Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் மறுப்பு..!

Advertiesment
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் மறுப்பு..!
, செவ்வாய், 2 மே 2023 (14:56 IST)
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
 
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வரும் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படம் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படும் அப்பாவி பெண்கள் குறித்த கதை அம்சம் கொண்டது. 
 
இந்த படத்தின் டிரைலர் இந்திய அளவில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த படத்திற்கு கேரள முதல்வர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் படம் சென்சார் பெற்றுள்ளதால் முதலில் உயர்நீதி மன்றத்தை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தி தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பு ட்ரஸ்ஸில் காண்ட்ராஸ்ட்டாய் மின்னும் ஹனிரோஸ்…!