Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டு தடவை காதல் தோல்வி ! ஆனால், டேட்டிங் இவருடன் தான்.!

Advertiesment
Aishwarya Rajesh
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (14:44 IST)
தமிழ் சினிமாவில் தற்போது  வளர்ந்து வரும் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி தனது சினிமா உலகை அடியெடுத்து வைத்தார்.  பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்ற அவர் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார்.


 
2010-ம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பிறகு “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். 
 
இந்நிலையில் சமீபத்தில் , தனது இளமை கால காதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, ”நான் 11ஆம் வகுப்பு படிக்கும் போது ஒருவரை உண்மையாக காதலித்தேன், ஆனால், அவர் என்னை ஏமாற்றி விட்டார்.கண்டிப்பாக அவர் அதை எண்ணி தற்போது பீல் செய்வர் “என்று ஐஸ்வர்யா ராஜேஷ் சிரித்தபடியே கூறியுள்ளார். 
 
அதன்பின் நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவரை 6 வருடங்களாக காதலித்து வந்தேன். ஆனால்  சில கருத்து வேறுபாடுகளால் நாங்களே எங்கள் காதலுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டோம்.இந்த இரண்டு நபருக்கு பிறகு நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார். 


 
சரி , நீங்கள் டேட்டிங் செல்ல விரும்பினால்அது எந்த நடிகருடன் செல்வீர்கள்  என்ற கேள்விக்கு  ஐஸ்வர்யா ராஜேஷ் ,பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புட் என டக்குனு அடுத்த நொடியில் பதிலளித்தார் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகனுக்கு பீஸ் கட்ட முடியாமல் ,நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி வருத்தம்