Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

vinoth
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (10:10 IST)
தமிழ் சினிமாவில் ஒரு  வணிக இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்திருக்கும் உயரம் அளப்பரியது. தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

லோகேஷ் தன்னுடைய ஒரு படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை மற்ற படங்களிலும் இடம்பெறச் செய்து கிராஸ் ஓவர் முயற்சிகளை மேற்கொண்டார். இது ஹாலிவுட் மற்றும் இந்திய படங்களில் முன்பே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்தான் என்றாலும் ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ என்பது இப்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.

இந்நிலையில் அவரின் அடுத்த படமான கைதி 2 பற்றி சமீபத்தில் பேசியுள்ளார். அதில் “கைதி 2 படத்தில் லியோ படத்தில் வரும் நிறைய கதாபாத்திரங்கள் வரும். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

நீண்ட இடைவெளிக்குப் பின் தொடங்கும் விஷாலின் அடுத்த படம்!

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments