“ஸ்ரீ பற்றி வரும் விஷயங்கள் என் வேலையைப் பாதிக்கின்றன… “- லோகேஷ் கனகராஜ் வருத்தம்!

vinoth
வியாழன், 1 மே 2025 (13:28 IST)
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப் பற்று ஆகியப் படங்களில் அவர் நடித்திருந்தார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் எல்லாப் படங்களும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் பெற்றன.

ஆனாலும் அவர் மற்ற நடிகர்கள் போல வணிக ரீதியாக வெற்றி பெற்ற ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  இந்நிலையில் மன அழுத்தத்துக்கு உள்ளான அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவர் உடல் இளைத்துக் காணப்படும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து அவருக்கு லோகேஷ் உள்ளிட்ட யாருமே உதவி செய்யவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. அதன்பின்னர் ஸ்ரீ மீட்கப்பட்டு அவர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் இன்று ரெட்ரோ படம் பார்க்கவந்த இயக்குனர் லோகேஷ் “சமூகவலைதளங்களில் ஸ்ரீ பற்றி வரும் விஷயங்கள் என்னையும் என் வேலையையும் பாதித்துள்ளன. அதனால்தான் இப்போது சமூகவலைதளங்களில் இருந்து ஒரு சிறு ப்ரேக் எடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments