கடந்த சில நாட்களாக நடிகர் ஸ்ரீ மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீ குடும்பத்தினர் இது குறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
நடிகர் ஸ்ரீ சிறந்த மருத்துவ பராமரிப்ப்பின் கீழ் இருக்கிறார் மற்றும் அவரது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சமூக ஊடகங்களிலிருந்து இடைவேளையை எடுத்து ஓய்வெடுத்துள்ளார் என்பதை அவரது நலன்விரும்பிகள், நண்பர்களும், ஊடகத்தினரும் அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.
அவர் நலமுடன் மீண்டு வர முக்கியமான கால கட்டத்தில் அவரது தனியுரிமையை மதித்து, அமைதியாக இருக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஊகங்களும் தவறான தகவல்களும் பெரிதும் கவலையை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் உள்ள அனைத்து ஊடகங்களும் அவரின் உடல்நிலை குறித்து அப்பட்டமான அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டுகிறோம்.
அவரது தற்போதைய நிலைமைக்கு அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் தவறான உள்ளடக்கங்கள் அல்லது நேர்காணல்களை நீக்கும்படி ஊடகங்களை கேட்டுக்கொள்கிறோம். அவர் மனநலத்துடனும் உடல்நலத்துடனும் மீளக்கூடிய சூழலை ஏற்படுத்த அவரின் தனிப்பட்ட சூழலை மதிக்க வேண்டுகிறோம்.
மேலும், சில இண்டர்வியூவுகளில் தெரிவித்துள்ள கருத்துக்களை நாங்கள் ஏற்கவில்லை என்றும், அவற்றை முற்றிலும் மறுக்கிறோம் என்பதையும் தெரிவிக்கிறோம்.
இந்த நேரத்தில் நீங்கள் அளிக்கிற அன்பும், ஆதரவும், புரிதலும் நாங்கள் மதிக்கிறோம். நன்றி!
இவ்வாறு ஸ்ரீ குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.