ரோலக்ஸ் திரைப்படம் எப்ப வரும்னு எனக்கேத் தெரியாது… சூர்யா ரசிகர்களிடம் தெரிவித்த லோகேஷ்!

vinoth
சனி, 3 மே 2025 (09:33 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிலையில் ரோலக்ஸ் என்ற டைட்டிலில் ஒரு கதை தயார் செய்திருப்பதாகவும் அந்த கதையை லோகேஷ் கனகராஜ் சூர்யாவிடம் கூறிய போது அதில் நடித்த சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவின. அதை லோகேஷ் மற்றும் சூர்யா ஆகிய இருவருமே உறுதிப் படுத்தியிருந்தனர்.

அதேபோல் லோகேஷ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி என்ற திரைப்படத்திலும் விரைவில் தான் நடிக்க இருப்பதாகவும் சூர்யா கூறியிருந்தார். ஆனால் இந்த படங்கள் தற்போதைக்குத் தொடங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பது போல தெரியவில்லை. ஏனென்றால் இருவருமே வேறு வேறு படங்களில் பிஸியாக உள்ளனர்.

இந்நிலையில் சூர்யா ரசிகர்களோடு இணைந்து ‘ரெட்ரோ’ திரைப்படத்தைப் பார்த்த லோகேஷிடம் ‘சூர்யாவோடு இணையும் ‘ரோலக்ஸ்’ திரைப்படம் எப்போது வரும்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் “ரோலக்ஸ் திரைப்படம் எப்போது வருமென்று தெரியாது. இருவரும் பிஸியாக இருக்கிறோம். கூலி திரைப்படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ வரவுள்ளது. ஆனால் கண்டிப்பாக ரோலக்ஸ் படம் பண்ணிதான் ஆகவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments