Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

36 வருட தவம்… உருகிய லோகேஷ் கனகராஜ்…. விக்ரம் படத்தைப் பாராட்டினாரா கமல்?

36 வருட தவம்… உருகிய லோகேஷ் கனகராஜ்…. விக்ரம் படத்தைப் பாராட்டினாரா கமல்?
, வியாழன், 5 மே 2022 (16:36 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.  மலையாள உரிமையை சிபு தமீம்ஸ் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் கமலுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில் “36 வருட தவம்! எனக்குள் இருக்கும் இயக்குனரை என் உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்ட!” என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். இதன் மூலம் கமல், விக்ரம் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் என்று ரசிகர்கள் கருதி, லோகேஷுக்கு வாழ்த்துமழைப் பொழிந்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேன் இந்தியா ரிலீஸ் ’விக்ரம்’…. வட இந்திய உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!