Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் பாக்குறதுக்கு முன்னாடி கைதி பாத்துடுங்க – திடீர்னு சொன்ன லோக்கி!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (09:18 IST)
இன்று கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் நேற்று இரவு திடீரென லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இன்று காலை இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது நீண்ட நாட்கள் கனவு நிறைவேற உள்ளதாக தெரிவித்துள்ளதுடன், விக்ரம் பார்க்கும் முன்னர் கைதியை மீண்டும் ஒருமுறை பார்த்து விடுமாறு கூறியுள்ளார்.

இது முதல் நாள் முதல் ஷோ பார்க்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மற்ற ஷோ பார்க்க இருப்பவர்கள் வேகவேகமாக கைதியை பார்த்து வருகிறார்களாம். கைதிதான் விக்ரமுக்கு முதல் பாகம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

அடுத்த கட்டுரையில்
Show comments