Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைதியை பார்த்துவிட்டு ‘விக்ரம்’ படத்தை பாருங்கள்: லோகேஷ் கனகராஜ்

Advertiesment
Lokesh
, வெள்ளி, 3 ஜூன் 2022 (07:15 IST)
கைதி படத்தை இன்னொரு முறை பார்த்துவிட்டு ‘விக்ரம்’ படம் பாருங்கள் என லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வணக்கம் நண்பர்களே! இதுவரை பட வெளியீட்டிற்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சி வசப்படுவதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் என் சின்ன வயதில் இருந்தே உலகநாயகன் ரசிகனாகவே இருந்திருக்கின்றேன். இன்றைக்கு அவரது படத்தை இயக்கி இருக்கிறேன். இன்னும் ஒரு கனவைப் போல் இருக்கின்றது.
 
இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்கு துணை நின்ற நல் உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விக்ரம் பட வேலைகளைத் தொடங்கி 18 மாதங்கள் ஆகின்றன. ரத்தமும் வியர்வையும் சிந்தி ரசிகர்களான உங்களை மகிழ்விக்க ஒரு மனிதரை, ஒரு நாட்டின் பெருமிதத்தை, உலக நாயகன் கமல்ஹாசனை கொண்டாட உழைத்திருக்கின்றோம். 
 
வாய்ப்புக்கு நன்றி சார்! இந்த திரைப்படம் உங்கள் ரசிகன் என்னிடமிருந்து உங்களுக்கு பரிசாக வருகிறது. இதனை நான் என்றென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்து வைப்பேன்.
 
என் அன்பான ரசிகர்களுக்கு, இன்னும் சில மணிநேரங்களில் ‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க உங்கள் சொந்தமாகிவிடும். அது உங்களை மகிழ்வித்து மறக்க முடியாத மகத்தான திரையரங்கு அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். இன்னொரு முறை கைதி படத்தை பார்த்துவிட்டு ‘விக்ரம்’ அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள்' என்று வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.ராஜேந்தருக்கு விசா கிடைத்தது...எப்போது அமெரிக்கா பயணம்?