Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் புரமோ வீடியோ.. ரஜினி பட டைட்டில்..!

Siva
புதன், 18 டிசம்பர் 2024 (17:17 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ரஜினி படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான போஸ்டரும் வெளியாகி உள்ளது.  .

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" படத்தை இயக்கி வருகிறார்.  இதன் மத்தியில், லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே சில திரைப்படங்களை தயாரித்துள்ள நிலையில், அவர் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு "மிஸ்டர் பாரத்" என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.ரஜினிகாந்த், அம்பிகா, சத்யராஜ் நடித்த ’மிஸ்டர் பாரத்’ என்ற படம் கடந்த  1986 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் பிரபல  யுடியூபர்   நடிகர் பாரத், நாயகனாக நடிக்கிறார். மேலும், மற்றொரு பிரபல யுடியூபர் நிரஞ்சன் இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரணவ் முனிராஜ் இசையமைப்பில், ஓம் நாராயணன் ஒளிப்பதிவில், திவாகர் டென்னிஸ் படத்தொகுப்பில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments