Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் லோகேஷ் கனகராஜ்…. முதல் வாய்ப்பு இவர்களுக்குதானாம்!

தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் லோகேஷ் கனகராஜ்…. முதல் வாய்ப்பு இவர்களுக்குதானாம்!
, செவ்வாய், 21 ஜூன் 2022 (16:29 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி வெற்றி பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை கமல் படங்கள் செய்யாத வசூல் சாதனையைப் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேவரைட் இயக்குனராகியுள்ளார் லோகேஷ்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க உள்ள லோகேஷ் தன் நிறுவனத்தின் மூலம் தனது உதவியாளர்களை இயக்குனர்களாக அறிமுகப்படுத்த உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் கோமாளி வெற்றிக் கூட்டணி… வெளியான லேட்டஸ்ட் தகவல்!