Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டு படங்கள்.. சூர்யா கொடுத்த மாஸ் தகவல்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டு படங்கள்.. சூர்யா கொடுத்த மாஸ் தகவல்..!
, ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (18:16 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டு படங்கள் நடிக்க இருப்பதாக சமீபத்தில் ரசிகர்களிடம் உரையாடிய சூர்யா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரோலக்ஸ் என்ற டைட்டிலில் ஒரு கதை தயார் செய்திருப்பதாகவும் அந்த கதையை லோகேஷ் கனகராஜ் சூர்யாவிடம் கூறிய போது அதில் நடித்த சம்மதம் தெரிவித்ததாகவும் சூர்யா சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார். 
 
அதேபோல் லோகேஷ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி என்ற திரைப்படத்திலும் விரைவில் தான் நடிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே அடுத்தடுத்து இரண்டு லோகேஷ் கனகராஜ் படங்களில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுவது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என ஏற்று கொள்ள முடியாது: நடிகை கஸ்தூரி