Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் தொடங்குவதில் தாமதம்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் தொடங்குவதில் தாமதம்!
, வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (08:40 IST)
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் தொடங்குவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் 100 ஆவது படமாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதர்பாட்சா தோல்வி… முத்தையாவின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல்!