சூட்டோடு சூடாக வெளியானது ‘லோகா 2’ அப்டேட்!

vinoth
சனி, 27 செப்டம்பர் 2025 (15:12 IST)
‘லோகா’ படத்தின் ஜூரம் இன்னும் திரையரங்குகளில் இருந்து வெளியேறவில்லை.  துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான  ‘லோகா’ திரைப்படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸானது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் கணிசமான திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது ‘லோகா’.

இதையடுத்து ஐந்து பாகங்கள் கொண்ட ‘லோகா-யூனிவர்ஸ்’ அடுத்தடுத்து உருவாக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது லோகா 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்ட்ய்ள்ளது. அதன்படி இரண்டாம் பாகத்தில் டோவினோ தாமஸ் மையக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments