Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிங்குசாமி அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லிங்குசாமி அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, ஞாயிறு, 27 மார்ச் 2022 (10:18 IST)
இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கிய லிங்குசாமி அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் திரைப்படம் ‘தி வாரியர்’.
 
 இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். வில்லனாக ஆதி நடித்துள்ள இந்த படத்தில் அக்ஷரா கவுடா, பாரதிராஜா, நதியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகம் முழுவதும் RRR முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் போஸ்டர்!