Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கமல் சார்கிட்ட ‘உத்தமவில்லன்’ படம் கேக்கல… மேடையில் சீக்ரெட் பகிர்ந்த லிங்குசாமி!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (15:00 IST)
லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு  இந்த படம் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்திற்கு அந்நிறுவனம் இன்னும் மீண்டு வரவில்லை.

இதனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த மற்ற படங்களும் ரிலீஸ் ஆக முடியாமல் சிக்கலில் உள்ளன. இந்நிலையில் இப்போது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ‘பிகினிங்’ என்ற படத்தை ரிலீஸ் செய்கிறது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய லிங்குசாமி மீண்டும் கமல்ஹாசனோடு இணைந்து ஒரு படம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் உத்தம வில்லன் பற்றி பேசிய அவர் “ நாங்கள் கமல் சாரிடம் பாபநாசம் படம் பண்ணதான் போனோம். ஆனால் அவர் உத்தமவில்லன் கதையை சொன்னார். அந்த படத்தை அவர் விருப்பப்படி எடுக்க விட்டோம். அந்த படத்தால் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்தோம். அதனால் தான் நாங்கள் தயாரித்த மற்ற படங்கள் ரிலீஸ் ஆவதிலும் சிக்கல் எழுந்தது. மீண்டும் கமல் சாரோடு ஒரு படம் பண்ண உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments