ப்ரதீப்பின் ‘LIK’ படத்தை ரிலீஸ் ரெட் ஜெயண்ட் மூவீஸ்…!

vinoth
வெள்ளி, 21 நவம்பர் 2025 (11:54 IST)
நடிகராக அடுத்தடுத்து மூன்று ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனது முத்திரையைப் பதித்துள்ளார் பிரதீப். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்தில் நடித்து வருகிறார். LIK படம் கடந்த ஆண்டே ஆரம்பிக்கப்பட்டாலும், தாமதமான ஷூட்டிங் காரணமாக வருன் டிசம்பர் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும், இதுவரை ஓடிடி வியாபாரம் முடியாமல் இருந்த நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் நிறுவனம் படத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது தயாரிப்பாளருகும் ஓடிடி நிறுவனத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இந்த படத்தை வாங்குவதில் இருந்து அமேசான் ப்ரைம் நிறுவனம் பின் வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 18 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஓடிடி வியாபாரம் முடியாவிட்டாலும் இந்த படத்தை அறிவித்த தேதியில் ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பாளர் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழக திரையரங்க விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திடம் தயாரிப்பாளர் லலித் Free distribution முறையில் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாஸ்க் படம் போட்டக் காசை எடுத்தால் நானே அந்த படத்தை ரிலீஸ் செய்வேன்… ஆண்ட்ரியா உறுதி!

உழைப்பை எளிமைப்படுத்தும் தளமாக ஏ ஐ உள்ளது… கீர்த்தி சுரேஷுக்கு கருத்துக்கு எதிராகப் பேசிய விஜய் ஆண்டனி!

மனோரமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஜோசியம்! அப்ப ஓடிப் போனவர்தான் அவர் கணவர்

கஞ்சா வழக்கில் சிம்புவின் ’ஈஸ்வரன்’ பட இணை தயாரிப்பாளர் கைது.. திரையுலகில் பரபரப்பு..!

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் சுப வீரபாண்டியன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments