Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள எல்.ஐ.சி படக்குழுவுக்கு LIC நிறுவனம் நோட்டீஸ்

Sinoj
சனி, 6 ஜனவரி 2024 (19:12 IST)
விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள எல்.ஐ.சி படக்குழுவுக்கு LIC  நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி, நானும் ரவுடிதான். தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா ஆகியோர் நடித்திருந்தார்.

இதையடுத்து, லவ்டுடே  பிரதீப் ரங்கநாதன்   மற்றும்  எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையில், லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு எல்.ஐ.சி( love insurance corporation) என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் பிரதீப் ரங்க நாதனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு எல்ஐசி என்று பெயர் வைத்துள்ள நிலையில், இப்படக்குழுவுக்கு LIC நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், '' LIC: லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றவில்லை என்றால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று LIC தெரிவித்துள்ளது.

இது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே  எல்ஐசி என்ற இப்படத்தின் பெயரை  வைத்தால் வழக்கு தொடர்வேன் என இயக்குனர் குமரன் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments