Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Iam the Devil- தனுஷின் 'கேப்டன் மில்லர்' டிரைலர் ரிலீஸ்!

Iam the Devil-  தனுஷின்  கேப்டன் மில்லர்  டிரைலர் ரிலீஸ்!
Sinoj
சனி, 6 ஜனவரி 2024 (18:37 IST)
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் இன்று  வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர்  நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’.

இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.  தனுஷிடன் இணைந்து சிவராஜ்குமார், சந்திப் கிசான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து.

ஏற்கனவே இப்பட முதல் சிங்கில் கபீர் வாசுகி பாடல் வரிகளின், ஜிவி பிரகாஷ் இசையில்  சீன் ரோல்டன் குரலில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் சென்சார் பற்றிய தகவல் வெளியானது. அதில், கேப்டன் மில்லர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், இன்று கேப்டன் மில்லர் பட டிரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதில்,  நடிகர் தனுஷ் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். ஆக்சன் காட்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளார். அதேபோல் கிராமத்துப் பெண் வேடத்தில் பிரியங்கா மோகன்  நடித்துள்ளார். அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு பின்னணி இசையை ஜிவி.பிரகாஷ் திறமையாக அமைத்துள்ளார்.  சித்தார்த்தா நுனியின் போட்டோகிராபி அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படம்  பொங்கல் ரிலீசின் போது சாதனை படைக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments