தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் லியோ. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று, ரூ.500 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.
இப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், விவிஐபிக்கள் மற்றறும் விஜய் மக்கல் இயக்க நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், லியோ விழாவில் பாஸ், ரசிகர்கள் மன்ற அடையாள அட்டை, ஆதார் ஆகிய 3 ம் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.
இதற்கிடையே, லியோ வெற்றி விழாவில் ரூ.10 ஆயிரத்துக்கு டிக்கெட் இருந்தும் அனுமதி தரவில்லை என ஒரு ரசிகை வேதனை தெரிவித்துள்ளார்.
விஐபி டிக்கெட் ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கியிருக்கிறோம். உள்ளே போனாலே சீட்டிங் புல் ஆகிவிட்டது. அனுமதி தரவில்லை. காசு கொடுத்து டிக்கெட் வாங்கியும் இப்படி பண்றாங்க என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.