Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னய்யா இது தமிழ்சினிமாவுக்கு வந்த சோதனை? -'வலைபேச்சு' அந்தனன் விமர்சனம்

என்னய்யா இது தமிழ்சினிமாவுக்கு வந்த சோதனை? -'வலைபேச்சு' அந்தனன் விமர்சனம்
, செவ்வாய், 31 அக்டோபர் 2023 (15:30 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய்,திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் கடந்த அக்டோர்பர் 19 ஆம் தேதி வெளியான படம் லியோ.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வசூல்  குவித்து வருகிறது.
இப்படம் ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ள நிலையில், இப்பட ரிலீஸுக்கு முன்பு, இப்பட ரிலீஸுக்குப் பின்பும் லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்து வருகிறார்.

இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தனன் தன் வலைதள பக்கத்தில்

‘’படிச்சவனோ, பாமரனோ, ஒரு படத்தை பார்த்தா அது அப்பவே புரியணும். அதை வுட்டுட்டு டைரக்டரே ஒவ்வொரு சேனலா உட்கார்ந்து நான் அதை நினைச்சு எடுத்தேன், இதை நினைச்சு எடுத்தேன்னு சொல்றத எப்படி எடுத்துக்கறது?
 
webdunia

ஒண்ணு பண்ணலாம்... லியோ ஒடுன தியேட்டர்ல மறுபடியும் ரசிகர்களை வரவழைச்சு இவரோட பேட்டிகளை திரையிடலாம்.

என்னய்யா இது தமிழ்சினிமாவுக்கு வந்த சோதனை?  ‘’என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு மாஸ்டர், விக்ரம், லியோ பட வசன கர்த்தாவும் இயக்குனருமான  ரத்னகுமார், ''படிச்சவனும் பாமரனும் Quoted tweets ல என்ன சொல்றாங்க னு தயவு செஞ்சி பாருங்க சார் ''என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜென்டில் மேன் 2 முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!