பிரபல இயக்குனர் செல்வராகவன் ஒரு சில தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் செல்வராகவன் தமிழில் சாணி காகிதம், பீஸ்ட், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இந்த படம் கோபி சந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு தமன் இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் என்பதும் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது அவர் பிஸியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது