Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லியோ படத்தால் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட ஹாலிவுட் படம்… ஓ இதுதான் காரணமா?

லியோ படத்தால் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட ஹாலிவுட் படம்… ஓ இதுதான் காரணமா?
, செவ்வாய், 7 மார்ச் 2023 (15:45 IST)
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் கௌதம் மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ்.

இந்நிலையில் இந்த படம் ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் இந்தியாவில் மட்டும் பார்க்கமுடியாதவாறு மறைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தகவல்கள் உண்மைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாரி செல்வராஜ் & துருவ் விக்ரம் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது? லேட்டஸ்ட் தகவல்!