Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் ''லெஜண்ட் சரவணனின்'' அடுத்த பட அறிவிப்பு....?

Advertiesment
Legend
, திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (14:49 IST)
பிரபல தொழிலதிபர் சரவணன்  நடிப்பில் ஒரு புதிய படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வெற்றிகரமான தொழிலதிபர் சரவணன் அருள்.  இவர், தயாரித்து, நடித்திருந்த படம் லெஜண்ட். இப்படத்தை இயக்குனர் ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியான இப்பட  2,500 தியேட்டரளில் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் வெளியிட்டிருந்தார்.

விமர்சகர்களுக்கும், ரசிகர்களும் சரவணன்  நடிப்பை விமர்சித்தனர். ஆனால், இப்படம் வெளியாகும் முன்னரே, தனக்கு சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க ஆசையிருந்ததாகவும், அப்போது வசதியில்லை. இப்போது  நடிப்பதாகவு, இது 3 நாட்கள் வருமானம் இப்ப்படத்திற்கான பட்ஜெட் என தெரிவித்திருந்தார்.

லெஜண்ட் சவரணனை ட்ரோல் செய்து, மீம்ஸ்களும், சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆனாலும் அதை சரவணன் அண்ணாச்சி பொருட்படுத்தவில்லை. நேற்மறையாகவே எடுத்துக்கொண்டார்.

இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஊடக நண்பர்களுக்கு வணக்கம். உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றீ, விரைவில் சந்திக்கிறேன் என்எனத் தெரிவித்துள்ளார். மேலும், லெஜண்ட் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக 2 வது வாரம் தொடர்வதாக வீடியோ பதிவிட்டுள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய விஜய் பட நடிகை !