Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் மட்டும் இல்லையாம்… லெஜண்ட் சரவணாவின் மற்றொரு அவதாரம்!

Advertiesment
நடிகர் மட்டும் இல்லையாம்… லெஜண்ட் சரவணாவின் மற்றொரு அவதாரம்!
, செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:54 IST)
லெஜண்ட் சரவணா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள நிலையில் தொடர்ந்து அவர் படங்களை தயாரிக்கும் முடிவிலும் இருக்கிறாராம்.

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணனுக்கு திடீரென ஹீரோ ஆசை ஏற்படவே தனது நிறுவன விளம்பரங்களில் தானே நடிக்க ஆரம்பித்தார். அதனால் பலர் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஆனாலும் விடாது எல்லா விளம்பரங்களிலும் அவரே நடித்தார். இதையடுத்து தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தை அவரை வைத்து விளம்பரப் படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இசைக்கு ஹேரிஸ் ஜெயராஜ், பாடலுக்கு வைரமுத்து என முன்னணிக் கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் அண்ணாச்சி.

இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இப்போது அண்ணாச்சி அடுத்தடுத்து வரிசையாக படங்களை தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம். இதற்காக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை இப்போது உருவாக்கியுள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்நியன் கதை உண்மையில் இவருடையதுதான்… அதிர்ச்சியளிக்கும் புது தகவல்!