Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குலு மணாலியில் கூல் லுக்கில் அண்ணாச்சி! இணையத்தில் பரவும் புகைப்படங்கள்!

குலு மணாலியில் கூல் லுக்கில் அண்ணாச்சி! இணையத்தில் பரவும் புகைப்படங்கள்!
, வியாழன், 18 மார்ச் 2021 (11:37 IST)
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணன் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மணாலியில் நடைபெற்று வருகிறது.

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணனுக்கு திடீரென ஹீரோ ஆசை ஏற்படவே தனது நிறுவன விளம்பரங்களில் தானே நடிக்க ஆரம்பித்தார். அதனால் பலர் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஆனாலும் விடாது எல்லா விளம்பரங்களிலும் அவரே நடித்தார். இதையடுத்து தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தை அவரை வைத்து விளம்பரப் படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இசைக்கு ஹேரிஸ் ஜெயராஜ், பாடலுக்கு வைரமுத்து என முன்னணிக் கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் அண்ணாச்சி.
webdunia

இப்போது படத்தின் படப்பிடிப்பு மணாலியில் நடைபெற்று வருகிறது. அதில் கதாநாயகி ஊர்வசி மற்றும் விவேக்குடன் அண்ணாச்சி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட அந்த புகைப்படங்கள் வேகமாகப் பரவி வருகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலையில் செம ட்ரடிஷனல் போஸ் கொடுத்து ரசனைக்கு ஆளான ஸ்ரீ திவ்யா!