Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'பிரபல நடிகர்கள்... பிரமாண்ட தயாரிப்பு''- முதல் படம் பற்றி விஜய் மகன் சஞ்சய் நெகிழ்ச்சி

Advertiesment
vijays son sanjay
, திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (16:25 IST)
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் லைகா தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாகவுள்ள நிலையில் இதுபற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது மகன் சஞ்சய். சமீபத்தில் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் இயக்குவதாக தகவல் வெளியானது.

எனவே, அவர் விரையில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகுவார் அப்படத்தை விஜய் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் விஜய் மாதிரி அவர் மகன்   சஞ்சயும் இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். ஆனால், நடிகராக அல்ல இயக்குனராக. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் இணைந்து அவரது மகன் ஜேசன் சஞ்சய்  நடனமாடியிருந்தார். இவரது நடனமும் வரவேற்பை பெற்றது. அவரது சினிமா  வருகைக்காக விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில்,  தன் தாத்தா வழியில்  தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமாவது பற்றி  சஞ்சய் கூறியதாவது: ‘’லைகா நிறுவனத்திற்கு என் கதை பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தை இயக்குவதற்கு லைகா நிறுவனம் எனக்கு முழு சுதந்திரம் தந்துள்ளது.  இப்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிட,  நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுடன் பேசி வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவில் எண்ட்ரி குடுத்த விஜய் மகன்..! முதல் படமே லைகாவோட! – மாஸ் அப்டேட்!