ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படம் இப்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
ருத்ரன் என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்து இப்போது இறுதிகட்ட வேலைகள் நடந்துவருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் அதே தேதியில்தான் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.