நடிகர் சிம்பு தற்போது, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏஏஏ (அன்பானவன் அசராதவன் அடங்காதன்) என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சிம்பு மற்றும் தமன்னா இடம்பெற்ற ஒரு புகைப்படத்தை சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு “அது ஏன் நடிகர்கள் மட்டும் எப்போதும் முழுதாக ஆடை அணிந்துள்ளனர். ஆனால் நடிகைகள் கவர்ச்சியாகவே உடை அணிந்துள்ளனர். இதன் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது” என குறை கூறியிருந்தார்.
இதையடுத்து, லட்சுமி ராமகிருஷ்ணனை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட நடிகர் சிம்பு, அந்த புகைப்படம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். இதைத் தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் “ சிம்பு என்னை தொலைபேசியில் அழைத்து மிகவும் வெளிப்படையாக பேசினார். எங்கள் இருவரின் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டோம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். ஒரு ஹீரோவாக நடந்து கொள்ளாமல், என்னிடம் பேசிய சிம்புவை பாராட்டுகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.