விக்ரம் நடித்துவரும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் முடியப்போவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
‘வாலு’ படத்தை இயக்கிய விஜய்சந்தர், தற்போது விக்ரமை வைத்து ‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களே ஷூட்டிங் பாக்கி இருக்கிறதாம். அதாவது, ஜூன் 15ஆம் தேதியோடு மொத்த ஷூட்டிங்கும் முடிகிறதாம். அதன்பிறகு, கெளதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் விக்ரம்.