Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையத்தில் லீக்கான லக்ஷ்மி மேனன் வீடியோ! அவர் சந்தித்த பிரச்சனை!

Advertiesment
இணையத்தில் லீக்கான லக்ஷ்மி மேனன் வீடியோ! அவர் சந்தித்த பிரச்சனை!
, சனி, 20 ஏப்ரல் 2019 (14:27 IST)
தன்னைப் பற்றிய பொய்யான வீடியோ இணையத்தில் பரவிய போது தான் அதில்  இருந்து மீண்டு வர மிகவும் கஷ்டப்பட்டதாக கூறியுள்ளார் லக்ஷ்மி மேனன்.


 
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில்  ஒரு ரௌண்டு வந்த லக்ஷ்மி மேனன் பிறகு தொடர் தோல்வி படங்களால் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். கேட்டால் தான் படிப்பில் கவனம் செலுத்து வருவதாக கூறி சமாளித்தார். 
 
தற்போது அவர் பிரபு தேவாவுடன் யங் மங் சங் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் மீண்டும் நடிப்பில் கவனத்தை செலுத்திவருகிறார். அதனை தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மேனன் பேசுகையில், ஒருமுறை என்னைப் பற்றிய ஒரு பொய்யான வீடியோ பரவியது. அது பொய் என்று எல்லோருக்கும் தெரிந்து, எனக்கு ஆதரவாக எல்லோரும் பேசினாலும், அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வர எனக்கு சில வாரங்கள் தேவைப்பட்டது. 

webdunia

 
அந்த சமயத்துல என்னால நார்மலா இருக்க முடியல. மனதளவில் ரொம்ப அவதிப்பட்டேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துட்டேன். இப்போது, நான் என் வேலைகளில் கவனமா இருக்கேன். அவரை மாதிரி இருக்கணும், இவரை மாதிரி இருக்கணும்னு நினைக்கும்போது தான் பிரச்சினை வரும். இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதனால், பிரேக், பிரச்சினைகள்... எதையும் நான் பெருசா எடுத்துக்கமாட்டேன். எப்போவும் சந்தோ‌ஷமா இருக்கணும், நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களையும் சந்தோ‌ஷமா வெச்சுக்கணும் என்று கூறி முடித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக் பாஸ் 3 சீசனில் நயன்தாரா? அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!