Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் சினிமாவில் மீண்டும் சிரிப்பழகி லைலா

Advertiesment
தமிழ் சினிமாவில் மீண்டும் சிரிப்பழகி லைலா
, வெள்ளி, 1 மார்ச் 2019 (17:21 IST)
2000 ஆண்டுகளின் போது  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லைலா. சிரிப்பழகி லைலா  அந்த காலத்தில் அஜித், சூர்யா, விக்ரம், பிரசன்னா உள்ளிட்ட பலருடன் நடித்திருந்தார். அவர் நடிப்பில், தீனா, தூள், நந்தா, உன்னை நினைத்து, கண்ட நாள் முதல் என பல படங்கள் ஹிட்டாகின.


 
கடைசியாக அஜித்துக்கு ஜோடியாக  2006ம் ஆண்டு பரமசிவம் படத்தில் நடித்தார். அதன்பின்னர் திருமணம் ஆகி கணவருடன் செட்டில் ஆகிவிட்டார். அதேநேரம் மலையாளம் மற்றும் கன்னட படங்களில் சிறப்பு தோற்றத்தில் அவ்வப்போது நடித்து வந்தார். ஆனால் முழுபடத்திலும் லைலா நடித்தது இல்லை.  இந்நிலயில் ஆலிஸ் என்ற திரில்லர் படத்தில் லைலா நடிக்க உள்ளார்.  ஹயுவன் சங்கர் ராஜா இசையமைத்து தயாரிக்கும் இப்படத்தை மனி சந்துரு  இயக்குகிறார்.  பிக்பாஸ் புகழ் ரைசா, பியார் பிரேம காதல் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். லைலாவுக்கு என்ன வேடம் என்பது தெரியவில்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் ரஜினி சாரை ஞாபகப்படுத்துகிறார்: பிரபல பாலிவுட் நடிகை புகழாரம்