Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது இந்தியாவின் ‘லாபட்டா லேடீஸ்’!

vinoth
புதன், 18 டிசம்பர் 2024 (09:59 IST)
உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு பல விருதுகள் அளிக்கப்பட்டாலும், ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது எனப்படும் அகாடமி விருது திரைத்துறையில் மிக உயரியதாக கருதப்படுகிறது.  ஆனால் இது அமெரிக்க படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆஸ்கர் விருது பரிந்துரைகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில்தான் மற்ற நாட்டு படங்கள் கலந்துகொள்ள முடியும்.

இந்நிலையில் இந்த ஆண்டு அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம் இந்தியா சார்பாக தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.  இந்த பட்டியலில் கொட்டுக்காளி, வாழை மற்றும் தங்கலான் போன்ற படங்கள் இருந்த நிலையில் அவை தேர்வு செய்யப்படாதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது ஆஸ்கர் விருதுகளுக்கான வெளிநாட்டு படங்களின் கடைசி 15 படங்களின் பட்டியலில் இருந்து லாபட்டா லேடீஸ் வெளியேறியுள்ளது. இதையடுத்து இதுபோன்ற சராசரியான படங்களைத் தேர்வு செய்து அனுப்பினால் பரிசை வெல்ல முடியாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

வெளிநாட்டு திரைப்பட விழாக்களுக்கு செல்ல பேட் கேர்ள் படத்துக்குக் கிடைத்திருக்கும் சலுகை…!

தனுஷ் போல சகோதரி மகனை நடிகராக அறிமுகப்படுத்தும் விஜய் ஆண்டனி!

அடுத்த கட்டுரையில்
Show comments