Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஹாராஜா படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாகக் கொண்டாட தயாரான படக்குழு!

மஹாராஜா படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாகக் கொண்டாட தயாரான படக்குழு!

vinoth

, வெள்ளி, 4 அக்டோபர் 2024 (08:48 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட இந்தியப் படங்களின் வரிசையில் முதலிடத்துக்கு சென்றது. நெட்பிளிக்ஸில் இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலங்களில் உண்மையாகவே 100 நாட்கள் ஓடிய படமென்றால் அது மகாராஜா படம்தான். சமீபத்தில் இந்த படம் சென்னையில் ஒரு திரையரங்கில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அதையடுத்து படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களும் பங்கேற்கும் பாராட்டு விழா ஒன்று வரும் ஞாயிறன்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோட் படத்தின் காட்சிகள் யுடியூபில் வெளியாகுமா?.. ஏஜிஎஸ் போட்ட ப்ளான்!