Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செந்தில் அவர்களின் துணிச்சலான கேள்விக்கு பாராட்டுகள்.- புளூ சட்டை மாறன்

Advertiesment
Senthil
, திங்கள், 11 செப்டம்பர் 2023 (12:23 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது பொதுக்குழு கூட்டம்  நேற்று காலையில்  சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நடிகர் விஷால், ''நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். சங்கத்தின் அடுத்த பொதுக்குழு கூட்டம்  நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெறும்'' என்று தெரிவித்திருந்தார்.

இதுபற்றி, நடிகர் சங்க பொதுக்குழுவிற்கு வந்த  மூத்த நடிகர் செந்தில் கோடி கோடியாக நடிகர்கள் ஊதியம் வாங்குகிறார்களே  நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்ட முடியாதா? என அனைத்து ஹீரோக்களையும் பார்த்து கேள்வி கேளுங்கள் என்று ஆவேசமாக கூறினார்.

இதுகுறித்து, சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’செந்தில் அவர்களின் துணிச்சலான கேள்விக்கு பாராட்டுகள். கலை நிகழ்ச்சி, ஸ்டார் கிரிக்கெட் என டிக்கட் போட்டு வசூலித்தது போதும்.

கோடீஸ்வர நடிகர்கள் உங்கள் சங்கத்திற்கு பணம் தர வேண்டுமென கேளுங்கள். அவர்கள் எவ்வளவு தருகிறார்கள் என்று பார்ப்போம்.

40 கோடியை டாப் 10 நடிகர்களே தந்து விட இயலும். கடன் வாங்க வேண்டிய அவசியமென்ன?

இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதை தொடர உத்தேசம்?’’என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தலைவர் 171’: அதிகாரபூர்வ அறிவிப்பு..!