அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய நீதிபதி அல்லி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை முதன்மை நீதிமன்றமும், சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றமும் தெரிவித்தது.
இந்த நிலையில் சென்னை முதன்மை நீதிமன்றம் தான் ஜாமின் மனுவை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.