Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை பிந்து போஸுக்கு கே.பி.ஒய் பாலா வழங்கிய உதவி.. ஷகிலா எடுத்த பேட்டி..!

Advertiesment
நடிகை பிந்து போஸுக்கு கே.பி.ஒய் பாலா வழங்கிய உதவி.. ஷகிலா எடுத்த பேட்டி..!

Mahendran

, திங்கள், 3 மார்ச் 2025 (16:29 IST)
நகைச்சுவை நடிகை பிந்து போஸ் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை நடிகை ஷகிலா நேர்காணல் செய்தார். இந்த பேட்டியின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
 
இதில், தனது மகனே தன்னை கைவிட்ட நிலையில், கேபிஒய் பாலா தனக்கு ரூ.80,000 வழங்கி உதவியதாகவும், அதற்காக தனது நன்றி தெரிவிக்கிறதாகவும் பிந்து போஸ் கூறியுள்ளார்.
 
இதையடுத்து, கே.பி.ஒய் பாலா பிந்து போஸுக்கு பண உதவி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான பாலா, அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
மேலும், கொரோனா காலத்தில் ஏராளமான பொதுமக்களுக்கு தன்னுடைய சொந்த பணத்திலிருந்து உதவி செய்ததாகவும், அவ்வப்போது இந்த உதவிகள் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு செய்வதாகவும் தெரிகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!