ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய கோட்டா சீனிவாசராவ்… இணையத்தில் பரவும் புகைப்படம்!

vinoth
வியாழன், 12 ஜூன் 2025 (12:15 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக அறியப்படுபவர் கோட்ட சீனிவாசராவ். மூத்த நடிகரான இவருக்கு திரைத்துறையினர் இடையே நல் மதிப்பு உள்ளது. இவர் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து மிரட்டிய கோட்டா சீனிவாசராவ் பாஜகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

தெலுங்கு நடிகரான இவர் தமிழில் சாமி, திருப்பாச்சி மற்றும் கோ ஆகிய படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர். சமீபகாலமாக வயது மூப்புக் காரணமாக அவர் படங்களில் நடிப்பதில்லை.

இந்நிலையில் அவர் உடல் இளைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. பலரும் இந்த புகைப்படத்தைப் பார்த்து கோட்டா சீனிவாசராவா இது என்று அதிர்ச்சியடைந்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments